Sunday, March 29, 2026 12:13 pm
சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இன்று வேட்பாளர்களை அறிவித்த வரும் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வேட்பாளராக சி.ஜோசப் விஜய் என அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. தனித்து களம் காண்கிறது விஜய் தலைமையிலான தவெக. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டார் வருகிறார் விஜய்.
தவெக தலைவர் விஜய் இன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள பிபரல தனியார் விடுதியில், 234 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

