Thursday, January 22, 2026 1:38 pm
பாடகி ஜானகியின் மகன் மரணம்
ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா இன்று காலை உயிரிழந்துவிட்டார். அவருக்கு 65 வயது இருக்கும் என கூறப்படுகிறது.
முரளியின் மரணம் குறித்து பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தனது முகநூல் பக்கத்தில், “ஜானகி அம்மாவின் அன்புக்குரிய ஒரே மகன் முரளியின் மரண செய்தியை இன்று காலை கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அன்பான சகோதரரை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வேதனையையும், துயரத்தையும் கடந்து செல்ல ஜானகி அம்மாவுக்கு இறைவன் மன பலத்தை கொடுக்க வேண்டும். மறைந்த ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டிருக்கிறார். மகனின் மறைவு ஜானகி அம்மாவை நிலைகுலைய செய்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இந்த மறைவை கேள்விப்பட்ட பிறகு பலரும் ஜானகிக்கு ஆறுதல் கூறிவருகிறார்கள்.
ராம் பிரசாத் என்பவரை கடந்த 1959ஆம் ஆண்டு ஜானகி திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு முரளி கிருஷ்ணா என்ற மகன் பிறந்தார். கடந்த 1997ஆம் ஆண்டு ராம் பிரசாத் மரணமடைந்தார். கணவரின் மரணத்துக்கு பிறகு மகனின் மீது ஜானகிக்கு இருந்த பாசம் பன்மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் அவரது வாழ்க்கையில் இன்னொரு இடி இறங்கியிருக்கிறது.

