Friday, February 14, 2025 2:47 am
கராச்சியில் கடந்த புதன்கிழமை நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் .சி.சி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக ஷாஹீன் ஷா அப்ரிடி, சவுத் ஷகீல் , கம்ரான் குலாம் ஆகிய மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28வது ஓவரில் மத்யூ பிரீட்ஸ்கே ஒரு சிங்கிள் ஓட்டம் எடுத்தபோது ஷா அப்ரிடு அவருக்கு இடையூறு செய்தார். 29வது ஓவரில் டெம்பா பவுமா ரன் அவுட் ஆனதை அடுத்து, அவரை மிக அருகில் வைத்து கொண்டாடிய சவுத், கம்ரான் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் தலா 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தவிர, மூன்று வீரர்களின் ஒழுக்காற்று பதிவுகளில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.மூவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

