பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை (மே 3) பாகிஸ்தானுடனான முழுமையான கடல்சார் வர்த்தகம் ,அஞ்சல் தொடர்பு என்பனவற்றுக்கு தடையை விதித்தது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் உத்தரவின்படி, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களில் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் இருந்து வான் மற்றும் மேற்பரப்பு வழிகள் வழியாக வரும் அனைத்து வகையான உள்வரும் அஞ்சல் மற்றும் பார்சல்களையும் உடனடியாக நிறுத்துமாறு தகவல் தொடர்பு அமைச்சு உத்தரவிட்டது.