பஹ்ரைனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்த இலங்கைப் பிரஜை நீரிழிவு தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டு, அவரது மகனுடன் நாடு திரும்பினார்.
ஜனவரி மாதம் சுவாசப் பிரச்சினைகளுக்காக சல்மானியா மருத்துவ வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட 47 வயதான கதீஜா, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் பஹ்ரைனில் வசித்து வந்தார்.
2007 ஆம் ஆண்டு சல்மானியா மருத்துவ வளாகத்தில் பிறந்த அவரது 18 வயது மகன் ரஃபிக்கும் முறையான ஆவணங்கள் இல்லாததாலும், பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
பஹ்ரைனில் உள்ள இலங்கைத் தூதரகம், பஹ்ரைன் குடிவரவு அதிகாரிகள், சல்மானியா மருத்துவ வளாகத்தில் உள்ள மருத்துவ ஊழியர்கள் மற்றும் பல சிவில் சமூக அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக இந்த நாடு திரும்புதல் மேற்கொள்ளப்பட்டது.
கடுமையான உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த திருமதி கதீஜா, ஜனவரி மாதம் சல்மானியா மருத்துவ வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு அதே மருத்துவமனையில் பிறந்த அவரது மகன் ரஃபிக், பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் தனது வாழ்நாள் முழுவதும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை இல்லாமல் கழித்தார்.
அவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக, சல்மானியா மருத்துவ வளாகம் ரஃபிக்கின் பிறப்பை உறுதிப்படுத்தும் சிறப்புச் சான்றிதழை வழங்கியது. இது தாய் மற்றும் மகன் இருவருக்கும் தேவையான பயண ஆவணங்களைச் செயல்படுத்த இலங்கைத் தூதரகத்திற்கு உதவியது.
திருமதி கதீஜாவின் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, வியாழக்கிழமை, இருவரும் கல்ஃப் ஏர் விமானத்தில் கொழும்புக்கு அழைத்துச் வரப்பட்டனர்.