Sunday, May 17, 2026 9:33 pm
இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான டி.பி.எஸ். ஜெயராஜ், தனது 72 ஆவது வயதில் கனடாவில் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல தசாப்தங்களாக இன அரசியல், மோதல் ,நடப்பு ஆகியனவற்றாஇப் பற்றி தனது விரிவான செய்தியறிக்கை , பகுப்பாய்வு என்பனவற்றால் அறியப்பட்ட ஜெயராஜ், இலங்கையின் மிக முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்பட்டார்.
இலங்கையில் தனது பத்திரிகைத் தொழிலைத் தொடங்கிய அவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து, பரவலாகப் பின்பற்றப்படும் தனது தளம் , பத்திகள் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து எழுதினார். தமிழ் அரசியல் பிரச்சினைகள் , இலங்கையின் உள்நாட்டு மோதல் தொடர்பான தனது ஆழமான செய்தியறிக்கைக்காக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றார்.
தனது பணி வாழ்க்கை முழுவதும், ஜெயராஜ் பல வெளியீடுகளுக்கு பங்களித்ததோடு, விரிவான அரசியல் பகுப்பாய்வு மற்றும் வரலாற்றுப் பின்னணியைத் தேடும் வாசகர்களிடையே ஒரு மரியாதைக்குரிய குரலாகவும் திகழ்ந்தார்.

