Wednesday, February 5, 2025 8:11 am
ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று புதன்கிழமை (5) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.
நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என
கொழும்பில் இன்றுபுதன்கிழமை [5]நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து நாளை முதல் அமுலாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக உலர் நெல் கொள்வனவு செய்யப்படும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.