Friday, January 16, 2026 8:48 pm
உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக, மான்செஸ்டர் யுனைடெட் , நெதர்லாந்து ஆகியவற்றின் முன்னாள் ஸ்ட்ரைக்கர் ரூட் வான் நிஸ்டெல்ரூய் நெதர்லாந்து பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணைவார் என்று தேசிய சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
70 போட்டிகளில் 35 கோல்களை அடித்த 49 வயதான வான் நிஸ்டெல்ரூய் ஒரஞ்சே அணி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராகும் போது பயிற்சியாளர் ரொனால்ட் கோமனுக்கு உதவியாளராக இருப்பார்.

