Saturday, April 11, 2026 4:21 pm
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் தொடரின் 14-வது லீக் போட்டி டெல்லி ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் ,டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சாதனைகளின் விபரம்.
இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 1 ஓட்ட வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி தங்களது முதலாவது தோல்வியை சந்தித்திருந்தது.
குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் டெல்லி ஒரு ஓட்டத்தால் பரிதாபமாகத் தோல்வியடைந்தது. முன்னரும் மூன்று முறை ஒரு ஓட்டத்தால் டெல்லி தோல்வியடைந்தது.
ஐ.பி.எல் போட்டிகளில் நான்காவது முறையாக ஒரு ஓட்ட வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓட்டவித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 2016 ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓட்டத்தால் தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்கெதிராக ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.
நான்கு முறை ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை சந்தித்து அதிகமுறை ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓட்டவித்தியாசத்தில் நான்கு முறை தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான அணி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

