Friday, January 9, 2026 4:42 pm
துருக்கிய ஏர்லைன்ஸ் தனது இஸ்தான்புல் அதிநவீன ஏர்பஸ் A350-900 விமானத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் மேம்படுத்தியுள்ளது என்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
புதிய அகலமான விமானத்தின் பயன்பாடு இலங்கையை துருக்கியுடனும் அதற்கு அப்பாலும் இணைக்கும் பாதையில் பயணிகளின் வசதி, செயல்திறன்,சேவை , தரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
மேம்பட்ட தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன், சிறந்த உள் அனுபவத்தை A350-900 கொண்டுள்ளது, இது கொழும்புக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையிலான இணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது, அதே நேரத்தில் பிராந்தியத்தில் ஒரு முக்கிய விமான மையமாக இலங்கையின் நிலையை உயர்த்துகிறது.

