Tuesday, February 17, 2026 6:06 am
தமிழக பாஜக தட்சித்தலைவர் நயினார் நாகேந்ந்திரன்ர் திரிஷாவை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் அவதூறான கருத்தை தெரிவித்து இருந்தார். அது அவரை சார்ந்த அரசியல் கட்சிக்காரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த மாதிரி அவர் பேசியிருக்கக் கூடாது என்று அவரை சார்ந்த கட்சி பிரமுகர்களே கூறியிருந்தார்கள். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பெரும்பாலும் திரிஷாவுடன் இணைத்து தான் பேசி வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி விஜய் தரப்பிலிருந்தும் அல்லது திரிஷா அத்தரப்பிலிருந்தும் எந்தவொரு எதிர்ப்புகளும் இதுவரை வரவில்லை.
இந்த நிலையில் த்ரிஷா தரப்பில் இருந்து ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறித்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதில் திரிஷாவின் வக்கீல் திரிஷா தரப்பிலிருந்து சில விஷயங்களை அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அது பின்வருமாறு: அதாவது எனது கட்சிக்காரர் எந்த ஒரு அரசியல் பின்புலத்தாலும் இல்லாமல் அவருடைய சொந்த உழைப்பாலும் தனது கலை மீது அவர் வைத்திருந்த மரியாதையினாலும் மட்டுமே அவர் வரையறுக்கப்பட விரும்புகிறார்.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது விமர்சனம் அல்லது விவாத பொருளாக மாற்றக்கூடாது என்பது தான் ஒரு பொதுவான கூற்று. ஆனால் உயர் பதவியில் இருப்பவர்கள் இந்த மாதிரி பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசியல் துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் இப்படியான ஒரு அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை தெரிவிப்பார் என எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை ந்னக்குறிப்பிடப்பட்டுள்ளது.

