Wednesday, January 7, 2026 8:47 pm
வெனிசுலா உடனான எண்ணெய் வர்த்தக தடையை மீறியதாக கூறி ரஷ்யா கொடியுடன் அட்லான்டிக் கடலில் வலம் வந்த ‛பெல்லா – 1′ எனும் எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை இன்று பறிமுதல் செய்தது. இந்த ‛பெல்லா -1′ கப்பலை ரஷ்யா தனது நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்களுடன் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அமெரிக்கா – ரஷ்யா இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெனிசுலாவை முடக்க டிரம்ப் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார். வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் உள்பட பிற வர்த்தகத்துக்கு தடை விதித்தார். இதற்கிடையே தான் ‛பெல்லா -1′ எனும் எண்ணெய் கப்பல் அமெரிக்காவின் தடையை மீறி வெனிசுலாவில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக இந்த எண்ணெய் கப்பலை அமெரிக்கா அட்லாண்டிக் கடலில் தீவிரமாக தேடிவந்தது.
இதனால் அந்த கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்வதை தவிர்க்கும் வகையில் ரஷ்யா களமிறங்கியது. ரஷ்யா தனது நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பலை அனுப்பி ‛பெல்லா -1′ எண்ணெய் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கியது. இது அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் ரஷ்யாவின் பாதுகாப்பு நடவடிக்கையை தாண்டி அமெரிக்கா அந்த எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்துள்ளது.

