மும்பையில் கிங் படத்திற்கான தீவிரமான சண்டைக்காட்சியை படமாக்கும்போது ஷாருக்கான் தசையில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் நடந்த ஸ்டண்ட் படப்பிடிப்பின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.நடிகருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதனால் குறைந்தது ஒரு மாதமாவது படப்பிடிப்பிலிருந்து முழுமையான இடைவெளி எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, ஜூலை , ஓகஸ்ட் ஆகிய மாதங்களில் பிலிம் சிட்டி உள்ளிட்ட பல்வேறு ஸ்டுடியோக்களில் தொடர திட்டமிடப்பட்டிருந்த கிங் படத்தின் தயாரிப்பு அட்டவணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.