தை மாதத்தின் சிறப்பாக விரதங்களில் ஒன்றான தை அமாவாசை நாளை 29 ஆம் திகதி புதன்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும்.
ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை ,தை அமாவாசை ஆகியவை மிகுந்த சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. தை மாதம் என்பது தேவர்களுக்கான விடியற்காலை நேரம் என நம்பப்படுகிறது. இதன் காரணமாக முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இது கருதப்படுகிறது.
29-ஆம் திகதி காலை 6 மணி முதல் 7:20 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு காலை 9 மணி முதல் 11:55 மணி வரைக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த தை அமாவாசையுடன் திருவோணம் நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. அந்த வகையில், 29-ஆம் தேதி காலை 9:21 மணிக்கு பின்னர் திருவோண நட்சத்திரமும் அமைந்திருக்கிறது.
கோயில், நீர் நிலைகள், வீடு ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இவ்வாறு தர்ப்பணம் செய்த பின்னர், அன்றைய தினம் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதனை செய்த பின்னர், மாலை நேரத்தில் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பாக அமையும். ஆனால், கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே விளக்கு ஏற்றலாம்.
, தை அமாவசையன்று காலையில் தர்ப்பணம் கொடுப்பதையும், மதிய நேரத்தில் படையல் வைப்பதையும், மாலையில் விளக்கு ஏற்றி வழிபடுவதையும் கடைபிடிக்க வேண்டும் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.