Wednesday, April 29, 2026 10:55 am
: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தரிசனம் செய்ததைத் தொடர்ந்து, இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலுக்குச் செல்கிறார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த அடுத்தடுத்த ஆன்மீகப் பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
நேற்று அதிகாலை திருச்செந்தூர் கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்த விஜய், அங்கு ‘சத்ரு சம்ஹார பூஜை’ உள்ளிட்ட முக்கிய வழிபாடுகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, இன்று ஷீரடி சாய்பாபா கோவிலில் அவர் தரிசனம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் களத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஜய், தனது தேர்தல் வெற்றிக்காகவும், கட்சி ரீதியான தடைகளைத் தாண்டுவதற்காகவும் இந்தத் தொடர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.

