Thursday, June 5, 2025 10:58 am
உலக சுற்றாடதினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையால் தாழையடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது . உலக சுற்றாட தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையானது கடந்த 30 ம் திகதியில் இருந்து பல்வேறு சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளை செய்து வருகின்றது
இன்று காலை 9 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன் பற்று உப கிளையானது கரையோர வலயங்களை தூய்மைப்படுத்தும் எனும் தொனிப்பொருளில் தாழையடி பிரதான கடற்கரையில் சிரமதானம் நடைபெற்றது.
செம்பியன் பற்று உப அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மருதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர்கள்,தாழையடி கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்