இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு கைது செய்யப்பட்டதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து துருக்கிய பாதுகாப்புப் படையினர் 1,418 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தற்போது 979 சந்தேக நபர்கள் காவலில் உள்ளனர், அதே நேரத்தில் 478 நபர்கள் நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று யெர்லிகாயா சமூக ஊடக தளமான X இல் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மக்கள் கட்சியின் (CHP) தலைவரான ஓஸ்குர் ஓசெல், இஸ்தான்புல்லின் சரச்சேன் மாவட்டத்தில் தனது பேரணிகளை செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிப்பதாகக் கூறினார்.
ஊழல் ,பயங்கரவாத தொடர்புகள் குற்றச்சாட்டில் இமாமோக்லு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 19 முதல் பல்லாயிரக்கணக்கான துருக்கியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். CHP கட்சியைச் சேர்ந்த இமாமோக்லு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் முக்கிய போட்டியாளராகக் கருதப்படுகிறார்.