Friday, January 23, 2026 5:50 am
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்துவ்ட்டு
திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்குச் சென்றதால் தற்போது ஐந்து தொகுதிகள் காலியாகி உள்ளன.
2026 சட்டமன்ற தேர்தல் ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலின் போது தான் அந்த தொகுதிகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் , ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ஆகிய இருவரும் தமது பதவியாஇ இராஜினாமா செய்துவிட்டு, திமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில், அவரது கட்சியில் இணைந்தார். இவர்கள் மூவரும் அதிமுக உறுப்பினர்கள் ஆகையினால் சட்டமன்றத்தில் அந்தக் கட்சியின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வால்பாறை தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலமானார். அதேபோல், சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்தார். இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே காலியாக இருந்த நிலையில், தற்போது ராஜினாமாக்கள் காரணமாக காலியான தொகுதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

