Sunday, March 29, 2026 9:42 pm
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. இந்த கட்சிக்கு 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 8 தொகுதிகளுக்கான வேட்பாளரை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அப்போது, தான் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திருமாவளவன் தற்போது எம்பியாக உள்ள நிலையில் தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்குத் திரும்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் ,திண்டிவனம் தொகுதியில் வன்னியரசு , பண்ருட்டியில் அப்துல் ரஹ்மான் , கள்ளக்குறிச்சியில் மாலதி, செய்யூரில் சிந்தனை செல்வன், திருப்போரூரில் பன்னீர் தாஸ் , பெரியகுளம் ஆற்றல் அரசு,அரக்கோணம் – எழில் கேரலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

