Thursday, January 29, 2026 8:26 pm
தனுஷின் 55வது படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டடு பூஜை போடப்பட்டது.
பின்பு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் நாயகியாக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அடுத்து சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகிஉள்ளது. . இதன் மூலம் தனுஷ் படத்திற்கு முதல் முறையாக அவர் இசையமைக்கிறார். இவரது முதல் அல்பமான ‘கட்சி சேர’ பாடலை தனுஷ் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் படத்தை தவிர்த்து சூர்யாவின் கருப்பு, அட்லீ – அல்லு அர்ஜூன் படம், ராகவா லாரன்ஸின் பென்ஸ் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

