ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுருவான கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, டொனால்ட் ட்ரம்ப் , இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக ஒரு மத ஆணையை (ஃபத்வாவை) பிறப்பித்துள்ளார்.
இந்த ஆணை அவர்களை “கடவுளின் எதிரிகள்” என்று அழைக்கிறது.உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மேலும் இது இஸ்லாமிய தலைமையை அச்சுறுத்தும் எந்தவொரு நபரையோ அல்லது ஆட்சியையோ “போர்த்தலைவர்” அல்லது ” மொஹரெப் ” என்று முத்திரை குத்துகிறது.
இது ஈரானிய சட்டத்தின் கீழ் கடவுளுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.மொஹரெப் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் மரணதண்டனை, சிலுவையில் அறையப்படுதல், கைகால்களை வெட்டுதல் அல்லது நாடுகடத்தலை எதிர்கொள்ள நேரிடும்.
அவர் மஹ்தியின் மீள் வருகைக்கு அழைப்பு விடுத்தார்
“இஸ்லாமிய அமைப்பு, மர்ஜாய்யத் (மத அதிகாரம்),தலைமையின் தூணாக இருக்கும் எந்தவொரு நபரின் உயிருக்கும், குறிப்பாக உச்ச தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. மத ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது” என்று ஷிராசி எழுதினார்.
“அவர்களைப் பாதுகாப்பதும், அத்தகைய அச்சுறுத்தல்களின் குற்றவாளிகளை எதிர்கொள்வதும் கடமையாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த எதிரிகளுடன் முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமிய அரசுகள் செய்யும் எந்தவொரு ஆதரவு அல்லது ஒத்துழைப்பும் “ஹராம்” அல்லது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் என்று ஃபத்வா மேலும் கூறியது.
1989 ஆம் ஆண்டு எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக அவரது நாவலான ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ வெளியான பிறகு இதேபோன்ற ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அந்த புத்தகம் பல முஸ்லிம்களால் அவமானகரமானதாகக் கருதப்பட்டது.
அந்த ஃபத்வா ருஷ்டியை தலைமறைவாக வாழ செய்தது.
இதன் விளைவாக ஒரு ஜப்பானிய மொழிபெயர்ப்பாளரின் கொலை, புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் மீது பல தாக்குதல்கள் நடைபெற்றன.
அதன் பின்னர் அவர் மற்ற படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பித்துள்ளார்.
இதில் 2023 இல் ஒரு கண்ணை இழந்த ஒரு கத்திக்குத்து சம்பவம் அடங்கும்.