சட்டவிரோத இடம்பெயர்வைத் தடுக்கவும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஜேர்மனி , லிதுவேனியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் மீண்டும் சோதனைச் சாவடைகளை போலந்து திறந்துள்ளது.
ஜேர்மன் எல்லையில் 52 சோதனைச் சாவடிகளும்,, லிதுவேனியன் எல்லையில் 13 சோதனைச் சாவடிகளும் திறக்கப்பட்டுள்ளதாக உள்துறை மற்றும் நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனைகள் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை 30 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.
அக்டோபர் 2023 இல், சட்டவிரோத இடம்பெயர்வைத் தடுப்பதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, போலந்துடன் எல்லைக் கட்டுப்பாட்டை ஜேர்மனி அறிமுகப்படுத்தியது.