பெலரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 86.82 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக பெலாரஷ்ய மத்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
செர்ஜி சிரான்கோவ் 3.21 சதவீத வாக்குகளைப் பெற்றார், ஒலெக் கைடுகேவிச் (2.02 சதவீதம்), அன்னா கனோபட்ஸ்காயா (1.86 சதவீதம்) , அலெக்சாண்டர் கிஷ்னியாக் (1.74 சதவீதம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். சுமார் 3.60 சதவீத வாக்காளர்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிராக வாக்களித்தனர்.
ஜனவரி 26 அன்று பெலாரஸில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு 85.69 சதவீதமாக இருந்தது.பெலாரஷ்ய சட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பவார்.
லுகாஷென்கோ முதன்முதலில் பெலாரஸின் ஜனாதிபதியாக 1994 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2001, 2006, 2010, 2015 , 2020 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்