சேர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் ஆட்சிக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.
நான்கு மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட முழக்கங்களுடன் மக்கள் திரண்டனர்.
275,000 முதல் 325,000 பேர் வரையான மக்கள் பங்குபற்றிய இப் பேரணியே சேர்பியாவில் நடைபெற்ற மிகப் பெரிய அரச எதிர்ப்புப் பேரணியாகும்.
பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் முயற்சியாக சனிக்கிழமை பெல்கிரேட் நகர போக்குவரத்து இரத்து செய்யப்பட்டது, அதே நேரத்தில் தலைநகருக்குச் செல்லும் வீதிகளில் பெரிய அளவிலான நெரிசல் ஏற்பட்டது.”பாதுகாப்பு காரணங்களுக்காக” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.
கடந்த நவம்பர் மாதம் சேர்பியாவின் இரண்டாவது நகரமான நோவி சாட்டில் நிலையத்தின் கூரை இடிந்து விழுந்து 14 பேர் கொல்லப்பட்டதிலிருந்து தினசரி போராட்டங்கள் நடைபெறுகின்றன.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு