Friday, January 23, 2026 6:04 am
சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனை, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) ஆதரவுடன் அவசர பழுதுபார்ப்புகளைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்குப் பிறகு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கம் மீட்டெடுக்கப்பட்டது, இதனால் கருத்தடை நடைமுறைகள் , அறுவை சிகிச்சைகள் மீண்டும் என்பன தொடங்கப்பட்டன.
மகப்பேறியல், பிறந்த குழந்தை , பிற அத்தியாவசிய அறுவை சிகிச்சைகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவும் வகையில், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 30, ஆம் திகதி மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன.
சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனை ஒவ்வொரு மாதமும் சுமார் 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கிறதுடன் வடமேற்கு மாகாணத்தில் ஒரு முக்கிய பரிந்துரை நிலையமாகும்.

