Wednesday, January 21, 2026 7:52 pm
சுவிட்ஸர்லாந்து செங்காளன் பாராளுமன்றத்தின்
முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது கடமையைப் பொறுப்பேற்றார்.
ஜெயகுமார் துரைராஜா 38 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து சுவிற்ஸர்லாந்து வந்த அகதி. இன்று, செங் காளன் நகரின் உயர்ந்த அரசியல் பதவியான நகரமன்றத் தலைவர் (Stadtparlament-Präsident) பதவிக்கு, பசுமை கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
பாராளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்களும், அவருடன் இணைந்து பயணிக்கும் நண்பர்களும் கலந்து சிறப்பித்தனர்கள்.பாராளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து டொச்
மொழியிலும் விளக்கினார்..
தமிழர் பண்பாட்டுடன் கூடிய இசையும்அவையரங்கில் வழங்கப்பட்டது.தமிழர் சிற்றுண்டி உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.
கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராமகிருஷ்ணமிஷனிலும், உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.
செங் காளன் நகர மக்களில் சுமார் 30% பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். அவர்களுக்காக அவர் குரல் கொடுக்கிறார்.இனவெறி, சமூக புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறார்.அவர் இதை ஒரு சவாலாக பார்க்கிறார்.“என் முன்னோடி ஜாக்லின் காசர்-பெக், கிரீன் கட்சியிலிருந்து வந்தவர். அவரின் பாதையில் நடக்க நான் தயாராக இருக்கிறேன்” என்கிறார்.
2011-ஆம் ஆண்டு சுவிற்ஸர்லாந்து குடியுரிமை பெற்ற ஜெயகுமார் துரைராஜா, ஜேர்மன் மொழியில் முதலில் கற்ற சொற்களை நினைவுகூர்கிறார்:
ஒருகாலத்தில் ஆவணமில்லாத அகதியாக செங்காளன் சுவிஸுக்குச் சென்ற துரைராஜா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கட்சி சார்பில் நகரமன்றத்தில் அமர்ந்து வருகிறார்.
இப்போது 56 வயதாகும் இவர், தனது முழு வாழ்க்கையையும் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அகதிகளுக்காகவே அர்ப்பணித்துள்ளார்.
ஆவணங்களும் இல்லை, கல்வியும் இல்லை, கைப்பையும் இல்லை. இப்படித்தான் ஜெயகுமார் துரைராஜா 1988-ஆம் ஆண்டு, 18 வயதில், சுவிற்சர்லாந்தில் காலடி வைத்தார்.


