இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் என்றும் பெப்ரவரி 3 4 ஆம் திகதிகளில் கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மின்சார பாதுகாப்பு , மின் அலங்காரச் செலவு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள், பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, மின்விளக்குகளால் கட்டிடங்களை அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.