Monday, July 13, 2026 5:31 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளமிங் விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியுடன் பல்வேறு பொறுப்புகளில் இணைந்து பணியாற்றி வந்த அவர், இந்த திடீர் முடிவை எடுத்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி சமீபகாலமாக சந்தித்து வரும் பின்னடைவுகளே பிளமிங் விலகலுக்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் வீரராக தனது பயணத்தை தொடங்கிய பிளமிங், 2009-ஆம் ஆண்டு முதல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
2026-ஆம் ஆண்டு வரை சுமார் 17 ஆண்டுகள் அவர் இந்த அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். சிஎஸ்கே அணியின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்டீபன் பிளமிங், இவ்வளவு நீண்ட காலத்திற்கு பிறகு விலகியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
17 ஆண்டுகால அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சம்பியன்ஸ் லீக் ரி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது.மேலும் சிஎஸ்கே அணி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுகளுக்கும், 10 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தார் பிளெமிங். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மேலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரும் சரிவை சந்தித்தது. இதை அடுத்து பிளெமிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

