முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஊழல் மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செப்டம்பர் 19 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு ஆணையத்தினதும், பிரதிவாதிகள் இருவரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர் தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அரசு நிலத்தில் கட்டப்பட்ட ஒரு அரசியல் அலுவலகத்திற்கு ரூ. 8.85 மில்லியன் இழப்பீடு வழங்கியதாக ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, பின்னர் அது போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணௌக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.