சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) டாக்டர் கீதா கோபிநாத், 2025 ஜூன் 15-16 வரை இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் 2005 க்குப் பிறகு IMF இன் சேவையில் உள்ள FDMD இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறை.
இந்தப் பயணத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி ,சர்வதேச நாணய நிதியம் ஆகியன இணைந்து நடத்தும் “இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் ஜூன் 16, 2025 அன்று நடைபெற உள்ள மாநாட்டில் டாக்டர் கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.