தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு சந்நிதியான் ஆச்சிரமத்தில் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் நாளாந்தம் ஆன்மீக நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
முதலாம் நாளான, வட பிராந்திய சத்திய சாயி சேவா நிலைய அன்பர்களின் பஜனையும், 2ம் நாள் “முருக வழிபாடு” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவன் க.பிரணவன் ஆன்மீக உரையாற்றினார். 3 ம் நாள் “கலியுக தர்மம்” என்ற தலைப்பில் செஞ்சொற்செல்வன் செ.ஶ்ரீ ஆதவன் ஆசிரியர் உரையாற்றினார்.