Saturday, April 4, 2026 9:19 pm
பெரம்பூர் , திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் போட்டியிடுகிறார். இதற்காக அவர் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் தகவல் முரண்பாடுகள் இருந்தன. இதனால் மனு நிராகரிக்கப்படும் நிலைமை இருந்தது. இந்நிலையில், தற்போது கூடுதல் பிரமாண பத்திரத்தை விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவேதாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், வயது உள்ளிட்ட விஷயங்களில் முரண்பாடுகள் இருந்தன. இது மனுவை நிராகரிக்கக்கூடும் என்கிற அச்சம் இருந்தது. எனவே, தற்போது கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
விஜய் கடந்த மாதம் 28ம் திகதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது வயதை 52 என்று குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த 1ம் திகதி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னுடைய வயதை 51 என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு வயசுதானே! என்று இதை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. வேட்பாளர்கள் தங்களின் விவரங்களை ஒளிவு மறைவு இன்றி தெரிவித்தாக வேண்டும். எனவே வயசு விஷயத்தில் இப்படி மாற்றி மாற்றி சொல்லியிருப்பது விஜய்யின் மனு நிராகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் சூழல் எழுந்தது. எனவேதான் விஜய் தற்போது கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார்.

