தங்கள் குழந்தைக்கு குடியுரிமை பெறுவதற்காக பிரசவிக்கும் நோக்கத்துடன் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவிற்குச் செல்லும் வெளிநாட்டினருக்கு எதிர்காலத்தில் விஸாக்கள் மறுக்கப்படலாம் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
இத்தகைய பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்க மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், செலவுகளை அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமத்துவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சலுகைகளுக்கான முதன்மை பயண நோக்கம் பிரசவம் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் நம்பினால், சுற்றுலா விசாக்களை மறுப்பார்கள், இது விஸா விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்படவில்லை.