Thursday, February 5, 2026 8:43 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் , துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி ஆகியோர் இன்று (05) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்தனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கிக் கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித தேவ்னிமோரி சர்வக்ஞ நினைவுச்சின்னங்களின் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அவர்கள் கலந்துரையாடினர்.
கொழும்பு, ஹுனுபிட்டியவில் உள்ள கங்காராமயா கோவிலில், பெப்ரவரி 5 முதல் 11 வரை சர்வக்ஞ நினைவுச்சின்ன வழிபாடு நடைபெறுகிறது.
இந்திய கலாசார அமைச்சு, இந்திய உயர் ஸ்தானிகராலயம் , சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

