பிரபல உதைபந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஜார்ஜியானா ரோட்டரிக்குயூசை திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார். இந்த ஜோடிக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ளன. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் காதலித்து வந்தனர்.
ஜார்ஜியானாவும், ரொனால்டோவும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்பெயினில் சந்தித்தனர். அப்போது கூக்கி நிறுவன கடையில் விற்பனையாளராக ஜார்ஜியானா இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. இந்த நட்பு 2017 ஆம் ஆண்டு காதலாக மாறியது.அதன் பின், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த தம்பதியினருக்கு அலானா ,மாட்டினா, பெல்லா என்ற பெண் குழந்தை பிறந்தன. 2022 ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை உயிரிழந்தது.
இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கின்றது. ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அல் நஸ்ர் என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.