காஸா நகரின் கிழக்குப் பகுதிகள் இஸ்ரேலிய விமானங்களும், டாங்கிகளும் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 123 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது. இது ஒரு வாரத்தில் பதிவான மிக மோசமானதாக்குதலாகும்.
போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது, இதில் 106 குழந்தைகள் அடங்கும், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் இறந்ததாக காஸாஅ சுகாதார அமைச்சு தெரிவித்தது.