Saturday, February 14, 2026 3:17 pm
காதலர் தினம் உலகம் எங்கும் வாழும் காதலர்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 8 நாடுகளில் காதலர் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 14 ஆம் திகதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தின வியாபாரம் களை கட்டி உள்ளது.
சில நாடுகளில் இந்த நாள் கொண்டாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது அல்லது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருக்கிறது. கலாசாரம், மதம், அரசியல் காரணங்களால் இந்த ‘காதல் திருவிழா’ அங்கு வரவேற்கப்படுவதில்லை.
சவூதி அரேபியா, ஈரான் ,பாகிஸ்தான் ,மலேசியா, இந்தோனேஷியா, வடகொரியா ,உஸ்பெகிஸ்தான் டர்க்மெனிஸ்டான் ஆகிய நாடுகள் காதலர் தினத்துக்குத் தடை விதித்துள்ளன.இந்த நாடுகளில் பெரும்பாலானவை பொது கொண்டாட்டம், வணிக விளம்பரங்களை தடுக்கின்றன – தனியார் காதல் கொண்டாட்டத்தை முழுதாக தடை செய்வதில்லை. சில இடங்களில் காலப்போக்கில் தளர்வு வந்திருக்கிறது. காதல் எல்லை தாண்டி வருவதில்லை – ஆனால் சில இடங்களில் அதை ‘மறைத்து’ கொண்டாட வேண்டியிருக்கிறது.
பல ஆண்டுகளாக சவூதியில் சிவப்பு ரோஜா, ஹார்ட் வடிவ பரிசுப் பொருட்களை விற்பனை தடுக்கப்பட்டது.கடைகளுக்கு எச்சரிக்கை, அபராதம் எல்லாம் வழக்கமாக இருந்தது. ஆனால் 2016-க்குப் பிறகு இளவரசர் முகமது பின் சல்மான்பொலிஸார்னி அதிகாரத்தை குறைத்ததால், இப்போது கடைகளில் வாலெண்டைன்ஸ் டெக்கரேஷன்கள் காட்சிப்படுத்ப்படுகின்றன.
2011ல் ஈரான் அரசு வலண்டைன்ஸ் பொருட்களின் உற்பத்தி, விற்பனையை தடை செய்தது. ஆனால் தனியார் கொண்டாட்டத்துக்கு தடை இல்லை. இளைஞர்கள் இரகசியமாக கொண்டாடுகிறார்கள். அதற்கு பதிலாக பழங்கால பெர்சியன் காதல் திருவிழா ‘Sepandarmazgan’ ஐ ஊக்குவிக்கிறார்கள். பாகிஸ்தான்-ல் 2017-ல் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பொது கொண்டாட்டம், ஊடக விளம்பரங்களை தடை செய்தது. இஸ்லாமிய மதிப்புகளுக்கு எதிரானது என்று! தனியார் கொண்டாட்டம் தடை இல்லை என்றாலும், பல இடங்களில் கட்டுப்பாடு தொடர்கிறது.
மலேசியா-வில் 2005-ல் தேசிய ஃபத்வா கவுன்சில் முஸ்லிம்களுக்கு ‘ஹராம்’ என்று அறிவித்தது – அநாகரிக நடத்தையை ஊக்குவிக்கிறது என்று. ஆனால் அல்லாத முஸ்லிம்கள் சுதந்திரமாக கொண்டாடுகிறார்கள். கோலாலம்பூரில் கடைகள் நிறைய விளம்பரம் செய்கின்றன.
இந்தோனேசியாவில் தேசிய அளவில் தடை இல்லை, ஆனால் ஷரியா சட்டம் நடைமுறையில் உள்ள பண்டா அசே பகுதியில் பொது கொண்டாட்டம் நடத்த தடை. மற்ற நகரங்களில் வெளிப்படையாக கொண்டாட்டம் நடக்கிறது.
வட கொரியாவில் வெளிநாட்டு கலாசார கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. வலண்டைன்ஸ் டே அங்கு அறியப்படவே இல்லை – அரசுக்கு விசுவாசத்தை மட்டுமே கொண்டாட வேண்டும். உஸ்பெகிஸ்தானில் 2012-ல் கல்வி அமைச்சு பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட்டம், கச்சேரிகளை தடை செய்தது. தேசிய கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று. டர்க்மெனிஸ்தான் டர்க்மெனிஸ்தானில் வெளிநாட்டு கொண்டாட்டங்களை அரசு கட்டுப்படுத்துகிறது. வாலெண்டைன்ஸ் டே பெரிதாக இல்லை.

