Tuesday, January 13, 2026 7:40 pm
தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. இதில் தேமுதிகவின் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடித்தால், காங்கிரஸ் வெளியேறும் பட்சத்தில் அந்த இடத்தை தேமுதிக நிரப்பலாம் என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, வலுவான கூட்டணியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
மறுபுறம், திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத பட்சத்தில், அதிமுகவுடன் கைகோர்ப்பது குறித்து தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் அதிமுகவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்து, மீண்டும் ஒரு மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமியும் ஆர்வம் காட்டி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முடிவை பொறுத்தே தேமுதிகவின் அடுத்த கட்ட நகர்வு அமையும் என்பதால், அக்கட்சி தற்போது ஒரு காத்திருப்பு உத்தியை கையாண்டு வருகிறது. எந்த கூட்டணி அதிக தொகுதிகளை வழங்குகிறதோ, அங்கு செல்வதே கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என தொண்டர்களும் கருதுகின்றனர்.

