இலங்கையின் தமிழ் மேடை நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் உச்சம் தொட்ட கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 45ஆவது நினைவஞ்சலி எதிர்வரும் வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு அவரது சிஷ்யரும் நன்பருமான எம்.சண்முகராஜாவின் ஏற்பாட்டில் கொழும்பு பழைய நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பருத்தித்துறையை பிறப்பிடமாக கொண்ட ஸ்ரீசங்கர் தனது கலைத்துறை பங்களிப்புகளை கொழும்பில் முன்னெடுத்து தமிழ் மேடை நாடகத் துறைக்கு புத்துயிர் அளித்தவர். நாடகத்துறை வளர்ச்சியோடு இலங்கை தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக நின்று செயற்பட்டவர்.
தென்னிந்திய திரைப்படத்துறையின் ஆலவிருட்சமான நடிகர் சிவாஜி கணேசனின் நெருங்கிய நன்பரான இவர் ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் நடித்து நமது நாட்டுக்கு பெருமை சேர்தவர்.நம்நாட்டிலும் மஞ்சள் குங்குமம் என்ற முழுநீளத் திரைப்படத்தை தயாரித்து நடித்து சாதனை படைத்தவர்.
இத்தகைய சிறப்புமிக்க இக் கலைஞரை இன்றைய இளம் சமுகத்தினர் அறியும் வகையில் ஸ்ரீசங்கர் நற்பணி மன்றம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி அதனூடாக கடந்த 45 ஆண்டுகளாக இந்த அஞ்சலியை எம்.சண்முகராஜா நடத்திவருகிறார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!