Wednesday, January 28, 2026 7:49 pm
நடிகர் தனுஷின் முதல் மகன் யாத்ரா. இவரை கதாநாயகனாக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் களமிறங்கி உள்ளார். இதற்காக, நடிகர் தனுஷே கதை திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி, படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர், திருப்பதி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தம்பதிகளாக இருந்து பிரிந்தவர்கள்.
தான் சினிமாவில் நடிப்பது தொடர்பாக தனது தாத்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரிடம் கூறுகையில் இருவரும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத்தான் சொன்னார்களாம். அதாவது உனது அப்பா உனக்கு எது செய்தாலும் அது உனது நல்லதுக்கும் வளர்ச்சிக்கும் தான் இருக்கும் எனவே, நீ அப்பா சொல்வதை கேட்டு நடந்து கொண்டால் போதும்” என்று தெரிவித்து வாழ்த்தினார்களாம். யாத்ராவும் சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, அதன் பின்னர்தான் திருப்பதிக்கு தரிசனத்திற்கு சென்றாராம்.

