யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 7 மாணவர்கள் தேசிய மட்டக் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டி சர்வதேச மட்ட போட்டி தெரிவுக்கான 42 பேர் கொண்ட குழாமிற்கு தெரிவாகியுள்ளனர். போட்டிகள் மார்ச் 29ம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. மீண்டுமொரு பரீட்சை மூலம் இவர்களில் 5 பேர் சர்வதேச மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.