வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க. த.க பாடசாலையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது .
பாடசாலை அதிபர் தவகோபால் ஜோகலிங்கம் தலைமையில் முற்பகல் 10 மணியளவில் பாண்ட் வாத்திய இசையுடன் ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டு பாடசாலை பொதுமண்டபத்தில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது
நிகழ்வின் இறுதியில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கட்டைக்காடு பங்குத்தந்தை , அருட் சகோதரர் ஆகியோருக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச சபை உறுப்பினர் பி.அலஸ்டன், கடைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் , அருட்சகோதரன், முள்ளியான் பிரதேச வைத்தியசாலை வைத்தியர் ஜோ. திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
