Wednesday, January 21, 2026 8:34 pm
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்த ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதி உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார். இதேபோல அதிமுகவைச் சேர்ந்த வெல்லமண்டி நடராஜனும் இன்று திமுகவில் சேர்ந்தார்.
அதிமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஓ.பி.எஸ். தலைமையில் புதிய அணி உருவானபோது அதில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில்தான், ஓபிஎஸ் அணியில் இருந்த மற்றொரு தீவிர ஆதரவாளரான எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சமீபத்தில் திமுகவில் சேர்ந்தார். தனது சேரன்மாதேவி எம்எல்ஏ பதவியையும் அவர் இராஜினாமா செய்தார். இந்த வரிசையில் தற்போது வைத்திலிங்கமும் இணைந்துள்ளார்.
ஓபிஎஸ் அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதிமுகவில் மீண்டும் இணையும் வாய்ப்பும் இல்லா்மல் போய் விட்டது.

