ஹைதராபாத்தில் இருந்து கடந்த மாதம் இலண்டனுக்குச் சென்ற விமானத்தில் எஞ்ஜின்களுக்கு எரிபொருள் துண்டிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) அறிக்கையின்படி, போயிங் 787 ட்ரீம்லைனரின் காக்பிட்டில் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் “CUTOFF” நிலைக்கு நகர்த்தப்பட்டன.
“எஞ்சின் 1 , எஞ்சின் 2 எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் RUN இலிருந்து CUTOFF நிலைக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஒரு வினாடி நேர இடைவெளியுடன் மாறின.
“என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், என்ஜின் N 1 , N2 அவற்றின் புறப்படும் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின.”
அப்போது விமானி அறையில் குழப்பம் ஏற்பட்டது. குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் “துண்டித்தார்” என்று கேட்பது கேட்கிறது. மற்றொரு விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளிக்கிறார்.
15 பக்க அறிக்கையில் விமானத்தின் கப்டன் எந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார், முதல் அதிகாரி என்ன கருத்துகளைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடப்படவில்லை. விமானிகளில் ஒருவர் விபத்துக்கு சற்று முன்பு “மேடே, மேடே, மேடே” என்றார்.
விபத்து நடந்து 30 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணையின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு AAIB அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்வதாகவும் அது தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்குள் இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!