Monday, February 9, 2026 6:29 pm
ஜோர்தானில் பணியாற்றிய நோர்வே தூதர் மோனா ஜூலின் , ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் குறித்து விசாரணையை எதிர்கொண்டதால் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 1990களில் இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி முயற்சிகளில் இவர் கலந்துகொண்டார்.
ஜோர்தானுக்கான நோர்வே தூதர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை மோனா ஜூலினின் இராஜினாமாவை அமைச்சு அறிவித்தது. 2019 ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பு வரையப்பட்ட உயிலில், ஜூல் மற்றும் அவரது கணவர் டெர்ஜே ரோட்-லார்சனின் குழந்தைகளுக்கு 10 மில்லியன் டொலரைல் எப்ஸ்டீன் விட்டுச் சென்றதாக வெளியான செய்திககளால் பரபரக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் நோர்வே செய்தி நிறுவனமான NTB-க்கு அளித்த அறிக்கையில், எப்ஸ்டீனுடனான தனது தொடர்பை மிகக் குறைவாக விவரிப்பது “துல்லியமற்றது” என்று ஜூல் ஒப்புக்கொண்டார், ஆனால் அந்தத் தொடர்பு தனது கணவரின் எப்ஸ்டீனுடனான உறவில் தோன்றியதாகவும், அவருடன் தனக்கு எந்த சுயாதீனமான சமூக அல்லது தொழில்முறை உறவும் இல்லை என்றும் கூறினார்.

