Tuesday, April 7, 2026 8:24 pm
எடப்பாடி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருண் குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தவெக வேட்பாளர் அருண் குமார் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களை உறுதிப்படுத்த முடியாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தவெக வேட்பாளருக்கு மாற்றாக நிறுத்தப்பட்டு இருந்தவரின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருத்தம் செய்ய வேண்டிய ஆவணங்களை கொண்டு வருவதாக கூறி அருண்குமார் சென்றதாகவும், ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை என்பதால் அவர் மாயமாகிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இதுவரை அருண்குமார் வரவில்லை என்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாற்று வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக – திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

