வடக்கு எகிப்தில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும் , 35 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்பியா கவர்னரேட்டில் உள்ள மஹல்லா அல் குப்ராவின் யமானி பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு இருபத்தி ஆறு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டது.
காயமடைந்த 35 பேரை மஹல்லா பொது மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றனர், அங்கு அவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழுக்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.
சிவில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பதினைந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் உள்ளன.தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் தீ அணைக்கப்பட்டுள்ளதாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.