Tuesday, February 17, 2026 8:57 am
கிறிக்கெற் உலகின் அசுரமாகிய அவுஸ்திரேலியாவுக்கு ரி20 உலகக்கிண்ணம் கைக்கு எட்டாத நிலையில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா அயர்லாந்துடனான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.இலங்கையிடமும் ஸிம்பாப்வேயிடமும் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் மூன்றாஅவ்து இடத்தில் உள்ளது.
கணித ரீதியாக அடுத்த கட்டத்திற்கான வேட்டையில் அவுஸ்திரேலியா இருந்தாலும் அது அதன் விதி இந்தக் குழுவில் உள்ள பிற முடிவுகளைப் பொறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது. ஓமானுக்கு எதிரான போட்டியில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும்.
ஸிம்பாப்வே 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இலங்கை,அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளுடன் ஸிம்பாப்வே மோத உள்ளது.இஅவ்ற்றில் ஏதாவது ஒரு போட்டியில் ஸிம்பாப்வே வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியாவின் கதை கந்தலாகிவிடும். ஸிம்பாப்வேயுடனான போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் பெற்று விடும்.
சூப்பர் எட்டுக்கு முன்னேற அவுஸ்திரேலியா இப்போது மற்ற முடிவுகளை நம்பியிருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை ஸிம்பாப்வே அயர்லாந்தை வீழ்த்தினால், அவுஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
அவுஸ்திரேலியா ஓமானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை,அயர்லாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் ஸிம்பாப்வே தோல்வியடைந்தால் மட்டுமே அவுஸ்திரேலியா உயிர்ப்புடன் இருக்கும்.
அயர்லாந்தை விட சிறந்த ஓட்ட விகிதம் அவுஸ்திரேலியாவுக்குத் தேவைப்படும்.
2009 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் குழு C இல் இலங்கை ,மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுக்கு எதிரான எதிரான போட்டிகளில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

