Monday, February 9, 2026 6:20 pm
கனடாவில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிக்கு “FIFA விஸா” எனப்படும் சிறப்பு விஸா அல்லது எந்த சிறப்பு சுற்றுலா விஸாவும் வழங்கப்படாது என்று கனேடிய அரசு அறிவித்துள்ளது.
ழங்கப்படும் சுற்றுலா விஸாக்களை கனடாவில் வேலைவாய்ப்பு அல்லது நிரந்தர குடியிருப்புக்காகப் பயன்படுத்த முடியாது என்றும் கனடா எச்சரித்தது.
உலகக்கிண்ணம் போட்டியைப் பார்வையிட கனடாவுக்கு வர விரும்பினால், நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியாக கனடாவுக்குள் நுழைவீர்கள் என்று கனேடிய அரசு கூறுகிறது.
சிறப்பு FIFA உலகக் கிண்ண 2026 விஸா எதுவும் இல்லை, ஆனால் கனடாவுக்குள் நுழைய உங்களுக்கு பின்வருவனவற்றில் ஒன்று தேவைப்படலாம்: பார்வையாளர் விஸா அல்லது மின்னணு பயண அங்கீகாரம் (eTA).
உலகக்கிண்ணப் போட்டியைப் பார்வையிடன் கனடாவிற்குள் நுழைவதாக உறுதியளிக்கும் குடியேற்ற முகவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மேலும் எச்சரிக்கப்படுகிறார்கள், விஸா அல்லது eTA-வை யாரும் உத்தரவாதம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர்.
“உங்கள் விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தகவல்களுக்கும் நீங்களே பொறுப்பு, ஒரு பிரதிநிதி உங்களுக்காக அதை நிரப்பினாலும் கூட. உங்கள் அனைத்து ஆவணங்களும் துல்லியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் 5 ஆண்டு தடைக்கு ஆளாக நேரிடும்” என்று கனேடிய அரசாங்கம் அறிவித்தது.
மேலும் விவரங்களுக்கு,https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/campaigns/soccer-2026.html?utm_source=IRCCSM&utm_medium=facebook பார்வையிடவும்.

