கொலம்பியா,ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்காக வியாழக்கிழமை பிறேஸிலின் அணியில் நெய்மர் திரும்ப அழைக்கப்பட்டார்.
2023 அக்டோபரில் மான்டிவீடியோவில் உருகுவேக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் போது இடது முழங்காலில் முன்புற சிலுவை தசைநார் சிதைந்ததிலிருந்து 17 மாதங்களாக நெய்மர் விளையாடவில்லை.
பிறேஸிசில் அணி மார்ச் 20 ஆம் திகதி பிறேஸிலியாவில் கொலம்பியாவையும், ஐந்து நாட்களுக்குப் பிறகு பியூனஸ் அயர்ஸில் ஆர்ஜென்ரீனாவையும் சந்திக்கும்.